‘Hanuman’ Box office Collection: ரூ.100 கோடி கிளப்பில் நுழைந்த ‘ஹனுமான்’ படம்..!

0
80

இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜா நடித்துள்ள திரைப்படம் ‘ஹனுமான்’. தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்துள்ளார். மேலும், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசை அமைத்திருக்கின்றனர். மேலும், இந்தப் படத்தை ‘ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட்’ எனும் நிறுவனம் தயாரித்துள்ளது.

‘ஹனுமான்’ படம் ஜனவரி 12ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகியாது.

இந்த நிலையில், ‘ஹனுமான்’ படம் தமிழில் ரூ.15 லட்சம், கன்னடத்தில் ரூ.5 லட்சம், மலையாளத்தில் ஐந்தாம் நாள் ரூ.1 லட்சம் வசூல் ஆனது. ஆறாவது நாளில் 11.34 கோடியை ஈட்டியது.

Photo-instagram

எட்டாவது நாளில் இந்தியாவில் 9 கோடி ரூபாய் வசூலித்தது. இந்த நிலையில் இதுவரை இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஹனுமான் திரைப்படம் ஏற்கனவே உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ .142 கோடிக்கு மேல் வசூல் ஆக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஹனுமான் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இனைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here