ரூ.250 கோடி வசூல் செய்த ‘ஹனுமான்’..! படக்குழு அறிவிப்பு..!

0
168

இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜா நடித்துள்ள திரைப்படம் ‘ஹனுமான்’. தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்துள்ளார். மேலும், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ண சவுரப் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து இசை அமைத்திருக்கின்றனர். மேலும், இந்தப் படத்தை ‘ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட்’ எனும் நிறுவனம் தயாரித்துள்ளது.

‘ஹனுமான்’ படம் ஜனவரி 12ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

முன்னதாக இந்தப் படம் இந்தியா முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்தப் படம் உலக அளவில் 250 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆகையால் இந்த ‘ஹனுமான்’ படம் 2024ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய அளவிலும் அதிக வசூலைக் குவித்த படமாகவும், அதிக லாபத்தைக் கொடுத்துள்ள படமாகவும் அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here