‘HBD A.R.Rahman’: இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாள்..!

0
92

HBD A.R.Rahman: இசை புயல் மற்றும் இசை மேஸ்ட்ரோ என அழைக்கப்படுபம் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது 57ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது அசாதாரண திறமைகள் உலகளாவிய இசை கலையில் அழியாத முத்திரையை பதித்துள்ளது. 90ஸ் காலகட்டத்தில் இருந்து தற்போது வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு இசை கலைஞன் ரஹ்மான்.

ரஹ்மானின் இசை உலகில் இளம் வயதிலேயே தொடங்கியது. ரஹ்மானின் ஆரம்பகால வாழ்க்கையானது பாரம்பரிய இந்திய இசை முதல் மேற்கத்திய பாப் மற்றும் மின்னணு ஒலிகள் வரை பலவிதமான தாக்கங்களால் குறிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த எம்.எஸ். விஸ்வநாதன், விஜய பாஸ்கர், இளையராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக இருந்தவர் ஏ.ஆர். ரஹ்மான்.

இவர், 1992ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ரோஜா’ திரைப்படம் மூலம் தனது தனித்துவமன இசையை வெளிப்படுத்தினர். அவரது இந்த புதிய முயற்சிக்கு முதல் படத்திற்கே அவருக்கு தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து, ‘பாம்பே’, ‘தில் சே’, ‘லகான்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனது இசையை உலகளவில் கொண்டு சென்று பெரும் பாராட்டைப் பெற்றார்.

இந்த நிலையில், அவருக்கு இரண்டு அகாடமி விருதுகள், இரண்டு கிராமி விருதுகள், ஒரு பாஃப்டா விருது மற்றும் கோல்டன் குளோப் உள்பட பல விருதுகள் கிடைத்தன. மேலும், 2008ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக மிகவும் உயரிய விருதான இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து தற்போது வரை அவர் தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளிலும் இசையமைத்து வருகிறார்.

ரஹ்மான் தனது திரைப்படப் பணிகளையும் தாண்டி, அவர் ஸ்டுடியோ ஆல்பங்கள், மேடை நிகழ்ச்சிகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதிலும் ஈடுபாடு உள்ளவர். அவர் பல்வேறு தொண்டு சேவைகளுக்கு ஆதரவு தருபவர். மேலும், கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் தீவிர ஈடுபாடு கொண்டவர்.

உலகளாவிய இசையின் மூலம் உலகையே நெருக்கச் செய்த இசை மேதை ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்த நாளான இன்று (ஜன.06) அவரது ரசிகர்கள் தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்த இசை புயல், அடுத்தடுத்து வெளியாகவுள்ள அயலான், லால் சலாம், தக் லைஃப், காதலிக்க நேரமில்லை, விண்ணைத்தாண்டி வருவாயா 2, சங்கமித்ரா உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைக்கிறார்.

இதையும் படிங்க: இதெல்லாம் ஒரு படமா?.. அனிமல் படத்தை கிழித்த ஜாவேத் அக்தர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here