HBD Rajini: குட்டிச் சுவரை எட்டிப் பார்ப்பாரா ரஜினி?.. காத்திருக்கும் ரசிகர்கள்..

0
96

நடிகர் ரஜினிகாந்த் கே.பாலசந்தர் இயக்கத்தில் 1975ஆம் ஆண்டில் வெளியான அபூர்வ ராகங்கள் படம் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். இந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார். இருந்தபோதிலும் தனது தனித்துவமான நடிப்பால் மக்கள் மனதில் பேசப்பட்டார்.

இதனால், கே.பாலசந்தரிடம் நன்மதிப்பைப் பெற்ற ரஜினி, தொடர்ந்து அவரது படங்களில் அதிகமாக நடிக்க ஆரம்பித்தார். முதலில் கேரக்டர் ரோல் பிறகு வில்லன் என நடித்து வந்த ரஜினிக்கு ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தனது சிறப்பான நடிப்பு, ஸ்டைல் போன்றவற்றால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்தார். அதன் தொடர்ச்சியாக அவர் தற்போது வரை ஹீரோவாகா நடித்து வருகிறார். 1975ஆம் ஆண்டி சினிமா பயணத்தை தொடங்கிய ரஜினி இன்னும் சில நாட்களில் தனது 50 ஆண்டுகால சினிமா பயணத்தை தொடவுள்ளனர்.

இந்நிலையில், ரஜினி காந்த இன்று தனது 73ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். ரஜினி ரசிகர்கள் பல்வேறு இடங்களில் இனிப்பு, உணவு வழங்கி தனது தலைவனின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

மேலும், காமன் டிபி (CDP) ரஜினி ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த டிபி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் தங்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் இந்த காமன் டிபி-யை வைத்துள்ளனர்.

தொடர்ந்து, ரஜினி தனது பிறந்த நாளன்று வீட்டின் முன்பு கூடியுள்ள ரசிகர்களைச் சந்தித்து அவர்களது வாழ்த்துகளைப் பெற்றுச்செல்வார். அந்த வகையில் இன்றும் ரஜினி காந்த் வீட்டின் வெளியில் உள்ள குட்டிச் சுவரை எட்டிப் பார்ப்பாரா? என்ற ஏக்கத்தில் ரஜினி ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

இந்நிலையில், ரஜினி காந்த்தின் பிறந்த நாளுக்கு சினிமா பிரபலங்கள், அனைத்துக் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட உலக அளவில் இருக்கும் ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here