வைரலாகும் ஹிந்தி நடிகை நோரா பதேகியின் டீப் பேக் வீடியோ.. ரசிகர்கள் அதிர்ச்சி!

0
149

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளுல் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவரது டீப் பேக் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோவுக்கு ராஷ்மிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், அந்த வீடியோவை வெளியிட்ட நபரை டெல்லி காவல் துறையினர், சமீபத்தில் கைது செய்தனர். இதற்கு, ராஷ்மிகா மந்தனா டெல்லி காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது ஹிந்தி நடிகைகள் பிரியங்கா சோப்ரா, கத்ரீனா கைப், கஜோல் ஆகியோரின் டீப் பேக் வீடியோக்கள் வெளியாகின. அந்த வரிசையில் தற்போது ஹிந்தி நடிகையும், பின்னணி பாடகியுமான நோரா பதேகியின் டீப் பேக் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் அவர் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை விளம்பரப்படுத்துவது போன்று வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அந்த விளம்பரத்தில் இருப்பது நான் இல்லை என்றும் இந்த விளம்பரத்திற்கும், தனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என நடிகை நோரா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது, “டீப் பேக் வீடியோ என்னை அதிர்ச்சியடைய செய்துவிட்டது. இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்”’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பாலிவுட் இயக்குநர் ஹன்சால் மேத்தா இயக்கும் ‘காந்தி’ வெப் சீரிஸ்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here