‘PT Sir’: நடிகர் ரியோவை வைத்து ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற படத்தை இயக்கியவர் கார்த்திக் வேணுகோபாலன். இவர், தற்போது இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் ஆதியை வைத்து ‘பி.டி.சார்’ என்ற படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தில் ஆதிக்கு ஜோடியாக கஷ்மிரா பர்தேசி நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் அனிகா சுரேந்திரன், பிரபு, முனிஷ்காந்த், ஆர்.பாண்டியராஜன், இளவரசு, ஆர்.தியாகராஜன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.
இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார்.
பள்ளியில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியரின் வாழ்வியலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியிருப்பதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த படம் குறித்து அறிவிப்புகள் வெளியான நிலையில் இந்த படத்தின் மீதான் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தற்போது ‘பி.டி.சார்’ படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நடிகர் ஆதி நேற்று தனது பிறந்த நாள் என்பதால் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தற்போது இது தொடர்பான வீடியோவை வெளியிட்ட படக்குழுவினர், படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தெரிவித்துள்ளது.