‘Hitler Teaser’: வெளியானது விஜய் ஆண்டனியின் ‘ஹிட்லர்’ பட டீசர்!

0
128

‘Hitler Teaser’: இயக்குநர் தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘ஹிட்லர்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இயக்குநர் தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘ஹிட்லர்’. படைவீரன், வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய இயக்குநர் தனா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹிட்லர்’ திரைப்படத்தின் டீசர் இன்று (டிச.26) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய் ஆண்டனி இதற்கு முன்பு நடித்த திரைப்படங்களை விட, மிகவும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். மிகவும் விறுவிறுப்பான கதையம்சம் கொண்ட ஆக்சன் திரில்லராக இந்த படம் அமைந்துள்ளது.

இந்த படத்தில், விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன், சரண்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல ஹைப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: ‘அட்லீ யாரை வைத்து படம் எடுத்தாலும் நாங்கள் தான் தயாரிப்போம்’.. அடம்பிடிக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here