Hotஆக முடிந்த ‘Hotspot’ படத்தின் பிரஸ் மீட்..!

0
116

‘Hotspot’: தமிழில் ‘திட்டம் இரண்டு’, ‘அடியே’ ஆகிய படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்தி இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘ஹாட்ஸ்பாட்’. இந்த படத்தில், கலையரசன், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், கவுரி கிஷன், சோபியா, ஆதித்யா பாஸ்கர், சுபாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

நான்கு வெவ்வேறு இடங்களில் நடக்கும் கதைகள், ஒரு கட்டத்தில் ஒன்று சேர்வதுதான் படத்தின் திரைக்கதை என இயக்குநர் கூறுகிறார். இதுவரை பேசாத விஷயங்கள் இந்த படம் பேசுவதாகவும் அவர் கூறினார்.

சமீபத்தில் ‘ஹாட்ஸ்பாட்’ படத்தின் டிரைலர் வெளியானது. பெண்ணியம், உடலுறவு, லெஸ்பியன் போன்றவற்றை பேசும் வகையில் இந்த டிரைலர் அமைந்துள்ளது.

டிரைலர் ஆரம்பித்தது முதல் கடைசி வரை கெட்ட வார்த்தைகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. இதனால், இந்த டிரைலருக்கு எதிரான கருத்துகளும் பரவி வருகின்றன.

இந்த நிலையில், இன்று ‘ஹாட்ஸ்பாட்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது டிரைலரில் வரும் காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்து இயக்குநரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

சென்சார் ஆகாத டிரைலரை வெளியிட்டது தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பத்திரிகையாளர் சந்திப்பு தனிப்பட்ட சந்திப்புதானே என்ற காரணம் கூறியிருக்கிறார்.

மேலும், செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளைத் தொடர்ந்து தாக்கிய நிலையிலும் இயக்குநர் அனைத்திற்கும் பதிலளித்து வந்தார். ஒருகட்டத்தில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு படம் பார்த்தால் தான் பதில் கிடைக்கும் என கூறிவிட்டுச் சென்றார்.

பின்னர், படத்தில் நடித்த கலையரசனிடம் செய்தியாளர் ஒருவர், ‘வளர்ந்து வரும் நிலையில் இப்படி ஒரு கதையில் நடிப்பது அவசியமா?’ என்பது போல ஒரு கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அவர், “இயக்குநர் என்னிடம் கதை சொல்லும் போது எனக்கு எதுவும் தவறாக தெரியவில்லை. கதை நல்ல கதை தான் நீங்கள் படம் பாருங்கள் புரியும்” என கூறினார்.

தொடர்ந்து, படத்தில் வரும் வசனங்கள், கெட்ட வார்த்தைகள், குழந்தை பேசும் சர்ச்சையான பேச்சு உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்பட்டது. சுமூகமாக நடந்த செய்தியாளர் சந்திப்பு இறுதியில் காரசாரமாக முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here