‘Raghava Lawrence’: தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக இருந்து நடிகராக மாறியவர் நடிகர் ராகவா லாரன்ஸ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து பட நடிகர்களுக்கும் நடினம் பயிற்றாளராக இருந்திருக்கிறார்.
இவர், முதன்முதலில் தெலுங்கு படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு பல்வேறு தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பாண்டி, முனி படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
தொடர்ந்து, லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படங்கள் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவராலும் கவனம் ஈர்க்கப்பட்டது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஜிகிர்தன்டா பாகம் இரண்டு மாபெரும் வெற்றிப்பெற்றது.
ராகவா லாரன்ஸ் அடிக்கடி தனது ரசிகர்களைச் சந்தித்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வார். அந்த வகையில் ஒரு நாள் லாரன்ஸை பார்க்க வந்த ரசிகர் ஒருவர் விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது லாரன்ஸ் தனது ரசிகர்களுக்காக ஒரு அறிவிப்பை தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “வணக்கம் நண்பர்களே ரசிகர்களே, கடந்த முறை சென்னையில் ரசிகர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது எனது ரசிகர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அந்த விஷயம் மிகவும் மனவேதனையாக இருந்தது. இதனால், எனது ரசிகர்கள் எனக்காகப் பார்க்க பயணம் செய்யக் கூடாது, அவர்களுக்காக நான் பயணம் செய்து அவர்களின் ஊருக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்தேன்.
இதனை, நாளை முதல் தொடங்க இருக்கிறேன். முதலாவதாக எனது ரசிகர்கள் சந்திப்பானது விழுப்புரம் மாவட்டம் லோகலட்சுமி மஹாலில் நடைபெற உள்ளது. நாளை சந்திப்போம்…!” என குறிப்பிட்டுள்ளார். இதனால், லாரன்ஸ் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.