சர்வதேச திரைப்பட விழாவில் ‘இடிமுழக்கம்’ திரைப்படம்.. நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு ரசிகர்கள் பாராட்டு..

0
143

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘இடிமுழக்கம்’. இந்த படத்திற்கு அவருக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடிக்கிறார்.

மேலும், சரண்யா பொன்வண்ணன், சுபிக்ஷா, செளந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ‘இடிமுழக்கம்’ படத்தின் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டது. அதன்படி, இந்தப் படம் 22ஆவது பூனே சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரிவில் திரையிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது.

இதனை, படத்தின் கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ்குமார் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார். இதற்கு, அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ‘நானாக இருந்தால் ‘அனிமல்’ படத்தில் நடித்திருக்கவே மாட்டேன்’ – நடிகை டாப்ஸி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here