தமிழ் சினிமாவில் ‘சினேகிதியே’, ‘நான் அவன் இல்லை 2’, ‘சாதுமிரண்டால்’ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர் மலையாள நடிகை ஸ்வேதா மேனம். தான் நடித்துள்ள ஸ்வேதா மேனன் சமீபத்தில் ஒரு பேட்டியளித்துள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, “என்னை கவர்ச்சி நடிகை என்று பொதுப்படையாக சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான வேடங்களில் நான் நடக்கிறேன்.
அந்தந்த கதாபாத்திரத்திற்கு எந்த மாதிரி உடை அணிய வேண்டும் என கூறுகிறார்களோ அதை அணிந்து நான் நடித்து வருகிறேன். பிகினி உடை அணிந்து நடிக்க வேண்டும் அல்லது ஆடையே இல்லாமல் நடிக்க வேண்டும் என சொன்னாலும் அதுபோன்று நடிக்க தயாராக இருக்கிறேன்.
என்ன காரணம் என்றால் அதுதான் சினிமா. நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை கதாபாத்திரங்கள் தான் முடிவு செய்கின்றன” என கூறியிருக்கிறார். ஸ்வேதா மேனமின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் பேசும்பொருளாக மாறியுள்ளது.