‘ஆபாசம் இல்லாத முத்த காட்சியில் நடிக்க தயார்’ – நடிகை மீனாட்சி சவுத்ரி

0
97

Meenakshi Chaudhary: ‘முத்தக் காட்சிகளிலும் சில நிபந்தனைகள் உள்ளன. கதைக்கு தேவைப்பட்டால் ஆபாசமில்லாத முத்த காட்சியில் நடிப்பேன்’ என நடிகை மீனாட்சி சவுத்ரி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படத்தின் மூலம் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி. சமீபத்தில் இவர், ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும், தற்போது விஜய்க்கு ஜோடியாக ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது மீனாட்சி சவுத்ரி ஒரு சுவாரசியமான தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி, ‘இனிமேல் நான் கதைக்கு தேவைப்பட்டால் ஆபாசமில்லாத முத்த காட்சியில் நடிப்பேன்’ என கூறியுள்ளார்.

சமீபத்திய நடந்த பேட்டியில் பேசிய மீனாட்சி சவுத்ரி, “சினிமாவில் எனக்குள் சில கட்டுப்பாடுகளை வைத்துள்ளேன். கதை, கதாபாத்திரம் அசவுகரியமாக இருந்தால் நடிக்க மாட்டேன். இதன் காரணமாக ஏற்கனவே பல பெரிய பட வாய்ப்புகளை விட்டுவிட்டேன்.

முத்தக் காட்சிகளிலும் சில நிபந்தனைகள் உள்ளன. கதைக்கு தேவையாக இருந்து, ஆபாசம் இல்லாமல் இருந்தால் முத்தக்காட்சியில் நடிப்பேன். தேவையில்லாமல் முத்தக்காட்சியில் நடிக்க கேட்டால் நிராகரித்து விடுவேன்.

தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆசை இருக்கிறது. பல படங்களில் நடித்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது எனக்கு முக்கியம் இல்லை. எனது நடிப்பை எல்லோரும் பாராட்ட வேண்டும் என்பது தான் முக்கியம்.

சினிமாவில் பிசியாக இருக்க, கண்ட படங்களில் எல்லாம் நடிப்பது எனக்கு பிடிக்காது. சினிமாவில் எனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் குறித்து மட்டும்தான் யோசிப்பேன். நல்ல கதைகளில் நடித்தால் தான் என்னால் எனது முழு திறமையை வெளிப்படுத்த முடியும்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் குவிந்த ரசிகர்கள்..! செல்பி எடுத்த நடிகர் கார்த்தி..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here