இளையராஜாவின் மகளின் உடல் சென்னை வருகை.. ரஜினிகாந்த் இரங்கல்..!

0
117

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி (47), சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (ஜன.25) மாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இலங்கையில் தனியார் வைத்தியசாலையில் இருந்து கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பவதாரிணி உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடற்கூராய்வு செய்த நிலையில் அவரது உடல் சென்னையில் இருந்து இன்று மாலை சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது.

பின்னர் அங்கிருந்து தி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு பவதாரிணியின் உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று இரவு அவர்களின் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு பவதாரிணியின் உடல் கொண்டு செல்லப்பட உள்ளது.

இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், “பவதாரிணியின் மறைவு மிகவும் வருத்தம் தருகிறது. இளையராஜாவிடம் தொலைபேசியில் இரங்கல் தெரிவித்தேன்” என பேசினார். தொடர்ந்து அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அதர்வாவை வைத்து புதிய படம் இயக்கும் ராஜேஷ்..! கதாநாயகி யார் தெரியுமா?..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here