இளையராஜா மகள் பவதாரிணி இலங்கையில் உயிரிழப்பு.. அவரது உடல் இன்று மாலை சென்னை வருகை..

0
119

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி (47) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (ஜன.25) உயிரிழந்தார். சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி, கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

எங்கும் பலனிக்காத நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆயுர்வேத சிகிச்சைக்காக பவதாரிணியை இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி பவதாரணி உயிரிழந்தார்.

பவதாரிணியின் உடல் இலங்கையில் தனியார் வைத்தியசாலையில் இருந்து கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடற்கூராய்வு செய்த பின்னரே பவதாரிணியிப் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், உடற்கூராய்வு முடிந்த பின்னர் பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து இன்று (ஜன.26) மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இறுதி சடங்குகளும் நடைபெற உள்ளன.

இலங்கையின் கொழும்புரில் நாளையும், நாளை மறுநாளும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக இளையராஜா தற்போது இலங்கையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஷ்ணு விஷால் புதிய படத்தின் அப்டேட்.. இயக்குநர் யார் தெரியுமா?..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here