‘அன்பு மகளே’ – இளையராஜாவின் உருக்கமான பதிவு..!

0
166

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி (47), சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (ஜன.25) மாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இலங்கையில் தனியார் வைத்தியசாலையில் இருந்து கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பவதாரிணி உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடற்கூராய்வு செய்த நிலையில் அவரது உடல் சென்னையில் இருந்து இன்று மாலை சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது.

பின்னர் அங்கிருந்து தி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு பவதாரிணியின் உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இளையராஜா தனது மனைவி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தனது மகளின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது இளையராஜா தனது ‘X’ தளத்தில் ‘அன்பு மகளே’ என குறிப்பிட்டு தனது மகளின் சிறிய வயது புகைப்படத்திற்கு பகிர்ந்து தனது வேதனையை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here