‘ராமர் முகத்தை முதலில் பார்த்த 150 பேரில் நானும் ஒருவன்’ – நடிகர் ரஜினிகாந்த்..!

0
112

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா நேற்று கோலாகலமாக நடந்தது. பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாட்டை தொடங்கி வைத்தார்.

இந்த விழாவிற்கு இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

அந்த வகையில், நடிகர்கள் ரஜினி, தனுஷ், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, ராம் சரண், அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், கத்ரினா கைஃப், கங்கனா ரணாவத் எனத் திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ‘அயோத்தி ராமர் கோவில் விழாவை நான் ஒரு ஆன்மீக நிகழ்வாகத்தான் பார்க்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும் அனைவரின் பார்வையும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ராமர் முகத்தை திறந்ததும் முதலில் பார்த்த 150 பேரில் நானும் ஒருவன். அதில் எனக்கு மிகவும் சந்தோஷம்’ என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘சைரன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. அப்டேட்டை வெளியிட்ட ஜெயம் ரவி..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here