‘வெற்றி கட்டாயம் திரும்பி வருவார்’ – நடிகர் விதார்த்..!

0
143

‘Vetri Duraisamy’: சென்னையின் முன்னாள் மேயர் சைதை சா. துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இயக்குநராக அறிமுகமான படம் ‘என்றாவது ஒரு நாள்’. இந்த படத்தில் நடிகர் விதார்த், ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே பல்வேறு திரைப்பட விழாக்களில் 43 விருதுகளை வென்றது.

இந்த நிலையில், இயக்குநர் வெற்றி துரைசாமி, பிப்ரவரி 5ஆம் தேதி ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லஜ் ஆற்றில் வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் காணாமல் போனதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் கஷாங் நாலா NH 05 இல் சுற்றுலா இடத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாகத் தெரிகிறது.

வெற்றி துரைசாமியுடன் பயணித்த மற்றுமொருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டென்சின் என்ற கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே சடலமாக மீட்கப்பட்டார். ஆனால், வெற்றி துரைசாமியை மட்டும் காணவில்லை என்பதால் அவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், துரைசாமி இயக்கத்தில் வெளியான ‘என்றாவது ஒரு நாள்’ படத்தின் கதாநாயகன் விதார்த் இந்த சம்பவம் குறித்து பேசுகையில், “வெற்றி கண்டிப்பாக விரைவில் வருவார். அவர் உயிருடன் வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

wildlife photography மீது மிகுந்த ஆர்வம் கொண்ட வெற்றிக்கு கட்டாயம் இந்த சவாலான நேரத்தை எதிர்கொண்டு கட்டாயம் திரும்புவார். வெற்றியும் அவரது தந்தையுமான முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி ஆகியோர் பலரிடம் காட்டிய கருணை, அவருக்கு எந்தத் தீங்கும் வராமல் பார்த்துக் கொள்ளும்.

வெற்றி ஒரு பெரிய அரசியல் பின்னணியைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். இருந்தபோதிலும், மிகவும் அடக்கமாக வெற்றி இருப்பார். பலருக்கு உதவி செய்திருக்கிறார்” என்றார். இருந்தபோதிலும், இயக்குநர் வெற்றி மாயமாகி மூன்று தினங்கள் ஆகியும் அவர் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here