இசை கொண்டாட்டத்தில் ‘இந்தியன்’ தாத்தா.. !

0
166

‘Indian 2’: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘இந்தியன் 2’.இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்றது. ‘இந்தியன் 2’ படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மே 16ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here