PM Modi: அசாம் மாநிலம் கவுகாத்தியில் ரூ.11ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, “இன்று தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் மூலம், அசாம், வடகிழக்கு மாநிலங்கள் மூலம் தெற்கு ஆசிய நாடுகளுடனான இணைப்பு பலம் பெறும்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் நிலைமை மாறியிருப்பதால் நான் பெரும் திருப்தியாக இருக்கிறேன். நமது புனித தலங்களின் முக்கியத்துவத்தை முந்தைய ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளத்தவறி விட்டனர்.
பாஜக அரசு பதவியேற்கும் முன்னர், அசாமில் ஆறு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. தற்போது, 12 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் புற்றுநோய் சிகிச்சைக்கான மையமாக அசாம் மாறி இருக்கிறது. 10 ஆண்டுகளில் சாதனை படைக்கும் அளவிற்கு சுற்றுலாப் பயணிகள் வடகிழக்கு மாநிலங்களுக்கு வந்திருக்கின்றனர்.
7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு நாட்டின் வளர்ச்சிக்குப் பணியாற்ற உறுதி ஏற்றிருக்கின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் ஆயுதப்படை சட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளது” என பேசினார்.