இனி காமெடி கலாட்டா தான்.. கையில் பக்கெட்டுடன் சந்தானம்.. வைரலாகும் போஸ்டர்..

0
70

Inga Naan Thaan Kingu: இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படம் ‘இங்க நான் தான் கிங்கு’. இந்த படத்தை என்.அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் வழங்கும், சுஸ்மிதா அன்புசெழியன் தயாரிக்கிறார்.

முன்னதாக, ‘வெள்ளைக்கார துரை’, ‘தங்கமகன்’, ‘மருது’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களை தயாரித்த இந்நிறுவனம் தற்போது சந்தானத்தை வைத்து இந்த படத்தை தயாரித்துள்ளது.

‘இங்க நான் தான் கிங்கு’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக பிரியாலயா நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் தம்பி ராமையா மற்றும் மறைந்த மனோபாலா ஆகியோர் நடிக்கின்றனர்.

இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை கமல்ஹாசன் வெளியிட்டார்.

சமீபத்தில் இந்த படத்தில் இருந்து டி.இமான் இசையில் ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில், தற்போது ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் வருகிற மே 10ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வமான போஸ்டரை படக்குழு வெளியிட்டது. தற்போது அந்த போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here