‘இன்னும் என்னை ஆபாச பட நடிகையாகவே பார்க்கிறார்கள்’ – சன்னி லியோன் வருத்தம்..!

0
125

Sunny Leone: சன்னி லியோன் தொடக்கத்தில் ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் உலகமெங்கும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து, அவர் ஹிந்தி சினிமாவில் நுழைந்து தொடர்ந்து பல படங்களில் வரும் பாடல்களுக்கு நடனம் ஆடி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் தமிழில் வெளியான ‘வட கறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். மேலும், சில தமிழ் படங்களிலும் அவர் நடித்து இருக்கிறார். இந்த நிலையில், தற்போது சன்னி லியோன் ஒரு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதில், “நான் ஆபாச பட நடிகையாக தைரியமாக வெளிப்படுத்தி இருக்கிறேன். அந்த படங்களில் நடித்திருப்பது அனைவருக்குமே தெரியும். ஆனால், சினிமாவுக்கு வந்த பிறகு அவ்வாறு இல்லை. நல்ல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நான் நடித்து வருகிறேன்.

மேலும், வெளியில் பல்வேறு நல்ல காரியங்களையும் நான் செய்து வருகிறேன். ஒரு ஆதரவற்ற சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வருகின்றேன். இந்த விஷயங்களை யாரும் பேசுவது இல்லை. எனது பழைய விஷயங்களை பற்றியே பேசுகின்றனர்.

என்னை ஆபாச பட நடிகை என்ற கோணத்திலேயே இன்னும் பார்க்கின்றனர். இது எனக்கு வருத்தமாக உள்ளது. தற்போது டெல்லியில் ஒரு ஹோட்டல் திறக்கவுள்ளேன்” என கூறியுள்ளார். இந்த வீடியோவிற்கு அவரது ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இரண்டாவது திருமணம் எப்போது?.. ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ரச்சித்தா..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here