‘J.Baby’: இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜே.பேபி’. இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிகை ஊர்வசி மற்றும் நடிகர் அட்டகத்தி தினேஷ், மாறன் நடித்துள்ளனர்.
இந்த படத்தை இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரோடக்ஷன் தயாரிக்கிறது. ஒரு வீட்டில் நடக்கும் எமோஷனல் காட்சிகளுடன் கூடிய கதையம்சம் கொண்ட இந்த படம் நிச்சயமாக ரசிகர்களை கவரும் என தயாரிப்பாளர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
மேலும், குறிப்பாக இந்த படத்திற்கு தணிக்கைக்குழு அதிகாரிகள் ஒரு கட் கூட கொடுக்காமல், ஒரு வசனத்தை கூட மியூட் பண்ணாமல் கிளீன் ‘U’ சான்றிதழ் கொடுத்திருப்பதாகவும் பா.ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தற்போது ‘ஜே.பேபி’ படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் உலக மகளிர் தினமான மார்ச் மாதம் 8ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளது.