‘ஜெயிலர் 2’ படத்திற்கு இதுதான் டைட்டிலா?.. மிரட்டலாக வெளியான புதிய தகவல்..!

0
147

‘Jailer 2’: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் என பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 615 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து. இதனால், 2023ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த இரண்டாவது தமிழ் திரைப் படம் என்ற பெயர் கிடைத்தது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க நெல்சனுக்கு யோசனை கொடுத்ததாகவும் அதன் பேரில் தற்போது அதற்கான பணிகளை இயக்குநர் நெல்சன் தொடங்கி உள்ளார்.

இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஏற்கனவே நயன்தாரா நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்து ‘சந்திரமுகி’, ‘தர்பார்’, ‘அண்ணாத்த’ ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது ரஜினிகாந்த் ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படங்களை முடித்த பின்னர் ஜெயிலர் 2ஆம் பாகத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘ஜெயிலர் 2’ படத்திற்கு ‘ஹூக்கும்’ என டைட்டில் வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here