‘RRR’ படம் அற்புதமாக இருந்தது – ஜேம்ஸ் கேமரூன்!

0
113

James Cameron: ஹாலிவுட்டில் ‘டெர்மினேட்டர்’, ‘டைட்டானிக்’, ‘அவதார்’ உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் உலக அளவில் பிரபலமடைந்தவர் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். இவர் இயக்கிய அவதார் படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியான நிலையில் ஏழு பாகங்கள் வரை இயக்க அவர் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், தற்போது இந்திய திரைப்படங்களை ஜேம்ஸ் கேமரூன் பாராட்டி பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், “நான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு இயக்குநரை பார்த்து வியக்கிறேன்.

புதிய இயக்குநர்களுக்கு வரும் புதுமையான எண்ணங்கள் எனக்கு ஏன் வருவதில்லை என் வருத்தப்படுவேன். கடந்த வருடம் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படம் பார்த்தேன். அந்த படம் மிக அற்புதமாக இருந்தது.

இயக்குநர் படத்தை பிரமாதமாக எடுத்திருந்தார். உலக அரங்கில் இந்திய சினிமா உயர்வான இடத்தை பிடித்து வருகிறது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “அவதார் படத்தின் ஐந்து பாகங்களுக்கான கதையை எழுதி விட்டோம். இதை ஏழு பாகங்கள் வரை எடுக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here