இதெல்லாம் ஒரு படமா?.. அனிமல் படத்தை கிழித்த ஜாவேத் அக்தர்!

0
74

‘Animal Movie’: பாலிவுட்டில் கடந்த மாதம் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப் பெரிய வெற்றியடைந்தது. இந்தப் படம், இதுவரை 900 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளது. ரன்பீருடன் ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், அனில் கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தில் அதிகளவில் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் இருப்பதாக பலரும் கூறி வந்த நிலையில் இந்தப் படம் குறித்த சர்ச்சை கிளம்பியது. மேலும், இந்தப் படம் கலவையான விமர்சனங்களே பெற்றது.

இந்த நிலையில் அனிமல் படம் குறித்து பாலிவுட் பிரபல பாடலாசிரியரும் திரைக்கதை எழுத்தாளருமான ஜாவேத் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார். AIFF எனப்படும் அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட ஜாவேத் அக்தர், அனிமல் படம் குறித்த தனது பார்வையை முன்வைத்தார்.

மேலும், அனிமல் படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் தனது ஷூவை நாவால் துடைக்க சொல்லும் காட்சி கொடுமையானது என விமர்சித்தார். இதெல்லாம் ஒரு காட்சியா. இப்படியா ஒரு காட்சி எடுப்பது என இயக்குநருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினார். படங்களில் பெண்களை கீழ்மையாக நடத்துவதை எப்படி ரசிக்க முடியும்.

இந்த மாதிரியான படங்களை வரவேற்பதா அல்லது நிராகரிப்பதா என்பதில் ரசிகர்களுக்கும் பங்கு உண்டு. இதுபோன்ற படங்கள் வருவதால் அடுத்து வரும் தலைமுறைக்கு பாதிப்பு ஏற்படும். இதில் கொண்டாடவும், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் எந்த லாபமும் கிடையாது என கடுமையாக விமர்சித்தார்.

இதையும் படிங்க: விஜய் சேதுபதி மீது கிரிமினல் வழக்கு..! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here