‘சைரன் படத்தின் ஜீவனே இது தான்’ – ஜெயம் ரவி..!

0
128

‘Siren – Jayam Ravi’: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சைரன்’. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேசுவரன் ஆகியோர் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சுஜாதா விஜய்குமார் தயாரிக்கிறார்.

மேலும், இந்த படத்தில் யோகிபாபு, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பிரமாண்ட பொருட்செலவில் ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார்.

இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். செல்வ குமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தின் அறிமுக விழா சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோஸில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய ஜெயம் ரவி, “எட்டிட்டர் ரூபன் மூலமாகத்தான் இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் அறிமுகமானார். அவர் சொன்ன கதை எனக்கு பிடித்திருந்ததால் உடனே ஒப்புக் கொண்டேன். படத்தை தயாரிக்க எனக்கு அம்மா போன்ற மாமியார் முன் வந்தார்.

ஒரு உயிரை காப்பாற்ற சில நொடிகள் முக்கியமானது என்பதை சொல்லும் படம். முதன் முறையாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறேன். இரண்டு விதமான டைம் லைன் இந்த படத்திற்குத் தேவையானதாக இருந்தது.

இந்த படத்தின் ஜீவனே கிளைமாக்ஸ் தான். அந்த கிளைமாக்ஸை நோக்கியே காட்சிகள் நகரும். கோமாளி படத்திற்கு பிறகு யோகி பாபு படம் முழுக்க என்னோடு பயணிக்கிறார். உண்மையிலே இந்த படத்திற்கு கடுமையான உழைத்திருக்கிறேன்.

75 நாட்கள் வரை படப்பிடிப்பு நடந்தது. முதலிலேயே இயக்குநரை நம்பி விட்டதால் எதிலும் தலையிடாமல் அவர் சொன்னதை செய்தேன். நான் புதுமுக இயக்குநர்களுக்கு நிறைய வாய்ப்புகள் வழங்குவதாக சொல்வார்கள்.

ஆனால் உண்மையிலேயே அவர்கள்தான் எனக்கு வாய்ப்பு கொடுத்து தூக்கிச் செல்கிறார்கள், வளர்க்கிறார்கள். அவர்களின் உழைப்பு, திறமையை எனக்காக தருகிறார்கள். நான் வெறும் கருவிதான்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here