Jayam Ravi: சினிமா, அரசியல் என இரண்டையும் ஒரே நேரத்தில் கையாண்டு வந்த உலக நாயகன் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என் ட்ரி கொடுத்தார். விக்ரம் திரைப்படம் பெரிய அளவில் வெற்றிபெற்றது.
கமலும், மணிரத்னத்தும் இணைந்து ஏற்கனவே நாயகன் படத்தை கொடுத்து பெரும் அடையாளமாக இருக்கிறார்கள். தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், தற்போது இந்த படம் குறித்து ஜெயம் ரவி கூறுகையில், “ தக் லைப் படத்தில் நான் கேமியோ ரோலில் நடிக்கிறேன். எனது காட்சி தொடர்பான படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் தொடங்க இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து, ஐரோப்பிய செர்பியா நாட்டில் விரைவில் நடைபெற உள்ள இதன் படப்பிடிப்பில் நடிகர் ஜெயம் ரவி கலந்து கொண்டு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.