J.Baby: இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜே.பேபி’. இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிகை ஊர்வசி மற்றும் நடிகர் அட்டகத்தி தினேஷ், மாறன் நடித்துள்ளனர்.
இந்த படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரோடக்ஷன் தயாரிக்கிறது. ஒரு வீட்டில் நடக்கும் எமோஷனல் காட்சிகளுடன் கூடிய கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது.
மேலும், இந்த படத்திற்கு தணிக்கைக்குழு அதிகாரிகள் ஒரு கட் கூட கொடுக்காமல், ஒரு வசனத்தை கூட மியூட் பண்ணாமல் கிளீன் ‘U’ சான்றிதழ் கொடுத்துள்ளது.
‘ஜே.பேபி’ படம் கடந்த மார்ச் 8ஆம் தேதி ரிலீஸானது. தாய் மகனின் பாசப்போராட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
ஊர்வசியின் நடிப்பு பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. இன்றளவும் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். தொடர்ந்து, ரசிகர்களும் படம் குறித்த தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.