‘J.Baby Promo’: இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜே.பேபி’. இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிகை ஊர்வசி மற்றும் நடிகர் அட்டகத்தி தினேஷ், மாறன் நடித்துள்ளனர்.
இந்த படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரோடக்ஷன் தயாரிக்கிறது. ஒரு வீட்டில் நடக்கும் எமோஷனல் காட்சிகளுடன் கூடிய கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது.
மேலும், இந்த படத்திற்கு தணிக்கைக்குழு அதிகாரிகள் ஒரு கட் கூட கொடுக்காமல், ஒரு வசனத்தை கூட மியூட் பண்ணாமல் கிளீன் ‘U’ சான்றிதழ் கொடுத்துள்ளது.
சமீபத்தில் ‘ஜே.பேபி’ படத்தின் ‘Little Bit Crazy’ ப்ரோமோ சாங் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. தொடர்ந்து, ‘ஜே.பேபி’ படத்தின் டிரைலர் வெளியானது. தாய் மகனின் பாசப்போராட்டம் தொடர்பாக வெளியான இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
நேற்று (மார்ச்.04) ‘ஜே.பேபி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை ஊர்வசி, அட்டக்கத்தி தினேஷ், பா.ரஞ்சித் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், தற்போது ‘ஜே.பேபி’ படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், படத்தில் வரும் கதையை நேரில் பிரதிபலிக்கும் விதமாக நடிகை ஊர்வசி மக்களிடம் சென்று கலாய்க்கிறார்.
அவரைப் பார்க்கும் மக்களும் சற்று குழப்பமடைந்தனர். அதன் பிறகு ஊர்வசியை காணவில்லை என கூறி அவரது மகள் அங்கிருக்கும் மக்களிடம் நோட்டீஸ் கொடுத்து படத்திற்கு ப்ரோமோஷன் செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.