‘Joshua’: இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜோஸ்வா இமை போல் காக்க’. இந்த படத்தில் பிக்பாஸ் வருண் கதாநாயகான நடித்திருக்கிறார்.
இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில், கிருஷ்ணா, ராஹி, யோகி பாபு, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
சமீபத்தில் வெளியான ‘ஜோஸ்வா’ திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறது. ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்திற்கு தணிக்கைக்குழு ‘U/A’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்த நிலையில் தற்போது படத்தின் ‘ஜோஸ்வா சிறு பேராசை’ என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது. தொடர்ந்து, இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படங்களுக்கு ஒரு ரசிகர்கள் பட்டாளமே இருக்கும் நிலையில், இந்த ‘ஜோஸ்வா’ படத்தின் ரிலீஸுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
2019ஆம் ஆண்டில் ‘ஜோஸ்வா’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருந்தது. தற்போது படம் மார்ச் 1ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் தற்போது ‘ஜோஸ்வா’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.
அதன்படி, ‘ஜோஸ்வா’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.