தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ஜோதிகா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி அவர் நடித்து கொண்டு இருக்கும் படத்தின் செய்திகளை பற்றியும், தன் குடும்பத்துடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் பதிவிடுவார்.
இந்த நிலையில் ஜோதிகா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் ‘ஜோதிகா மேம் சூர்யா சாரை ஒரு நாள் மட்டும் எனக்கு கடன் கொடுப்பீங்களா?’ என ஒரு ரசிகை வினவினார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக ஜோதிகா அந்த கமெண்டிற்கு ‘ஊப்ஸ், நாட் அலோவ்டு’ என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.