Actress Andrea : இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில் ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘கா’. ஆண்ட்ரியா இந்த படத்தில் காட்டுக்குள் சென்று பறவைகள், விலங்குகளைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக் கலைஞராக நடித்திருக்கிறார்.
மிகவும் ஆக்ஷன் நிறைந்த கதையாக இந்த படம் அமைந்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு 2022ஆம் ஆண்டே முடிந்த நிலையில் பல்வேறு காரணமாக படம் ரிலீஸாவதில் தாமதம் ஏற்பட்டது.
தற்போது ‘கா’ படம் வரும் மார்ச் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ‘கா’ படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில், தற்போது படத்தின் புதிய பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தின் ‘காட்டுப்புலி உறு உறும்ம’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.