பாலிவுட் நடிகருடன் இணையும் காஜல் அகர்வால்.. விரைவில் ஷூட்டிங்..

0
143

Kajal Aggarwal: முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் சிவனடியார் கண்ணப்ப நாயனாரின் வரலாற்றை கூறும் ‘கண்ணப்பா’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கண்ணப்ப நாயனாரின் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு நடிக்கிறார்.

இந்த படம் ஏ.வி.ஏ. என்டர்டெயின்மென்ட் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி பேனரின் கீழ் தயாரிக்கப்படுகிறது. மேலும், இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் பான் இந்தியா அளவில் உருவாக்க திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில், ‘கண்ணப்பா’ திரைப்படத்தில் ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் நடிக்க இருக்கிறார்.

இதன் மூலம் தெலுங்கு சினிமாவில் நடிகர் அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். இந்நிலையில், அக்ஷய் குமார் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கண்ணப்பாவின் பயணத்தில் என்னை இணைத்துக் கொண்டதற்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது படம் குறித்த ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ‘கண்ணப்பா’ படத்தில் காஜல் அகர்வால் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here