‘கலைஞர் 100’ விழா: ரஜினி, கமலுக்கு நேரில் அழைப்பு!

0
69

‘kalaignar 100 years’: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தமிழ் திரைத்துறை வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பைப் போற்றும்விதமாக ‘கலைஞர் 100 விழா’ பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கலைஞர் கருணாநிதியின் திரைப்பயணம் மற்றும் சாதனைகளைக் கொண்டாடும் விதமாக அவரின் நூறாவது ஆண்டை சிறப்பிக்க இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர்.

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா தி.மு.க. சார்பில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் ‘கலைஞர் 100 விழா’ பிரமாண்டமாக நடத்தப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில், ‘கலைஞர் 100 விழா’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் எனக் கூறி தமிழ் திரைப்பட சங்க உறுப்பினர்கள் இன்று நடிகர் ரஜினியிடம் அழைப்பிதழ் வழங்கியுள்ளனர். அழைப்பிதழை அன்போடு ஏற்றுக்கொண்ட ரஜினி நிகழ்ச்சியில் நிச்சயம் கலந்துகொள்வதாக உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து நடிகர் கமலை நேரில் சந்தித்த தமிழ் திரைப்பட சங்க உறுப்பினர்கள், கமலிடம் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கினர். அதனைப் பெற்றுக்கொண்ட கமலும் கட்டாயம் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக கூறியிருக்கிறார்.

மேலும், நடிகர்கள் தனுஷ், நயன்தாரா உள்ளிட்ட திரைத்துறை நட்சத்திரங்கள் பலருக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜனவரி 6ஆம் தேதி ‘கலைஞர் 100 விழா’ நிகழ்ச்சி சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆட்டம் போட்ட அஜித்..! கிழித்தெறிந்த ப்ளூ சட்டை மாறன்..! என்ன காரணம்?..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here