தேர்தலால் பாதிக்கப்படும் படங்கள் – மீண்டும் தள்ளிப்போகும் ‘கல்கி 2898 ஏ.டி’.. ரசிகர்கள் வேதனை..

0
113

Kalki 2898 AD: பாகுபலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பான் இந்தியா அளவில் பெரிய நடிகராக உயர்ந்தவர் பிரபாஸ். அதனைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் வெளியாகவுள்ள படங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

ஆனால், அவரது நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷியாம். ஆதிபுருஷ் போன்ற படங்கள் பெரிய தோல்வியை சந்தித்தன. சமீபத்தில் கே.ஜி.எப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான ‘சலார்’ திரைப்படத்தில் பிரபாஸ் நடித்திருந்தார்.

இந்த படம் உலகளவில் ரூ.500 கோடி வசூலை கடந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கத்தில் ‘கல்கி 2898 ஏ.டி’ படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். அறிவியல் சார்ந்த கதைக்களத்தில் தயாராகும் இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது. சமீபத்தில் படத்தின் முதல் டீசரை படக்குழு வெளியிட்டது. இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதைதொடர்ந்து, பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்திற்காக புதிய வகை துப்பாக்கியின் புகைப்படத்தை படக்குழு சமூக வலைதளத்தில் வெளியிட்டது. இந்த புகைப்படம் ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் ஒரு புதிய அப்டேட் ஒன்று வெளியாகியது. அதன்படி, ‘கல்கி 2898 ஏ.டி’ படத்தின் கதாநாயகன் பிரபாஸின் கதாபாத்திரத்தின் பெயர் ‘பைரவா’ என அறிவிக்கப்பட்டது.

‘கல்கி 2898 ஏ.டி’ திரைப்படம் வருகிற மே மாதம் 9ஆம் தேதி ரிலீஸாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்தது. நிலையில் அதனைத் தொடர்ந்து இந்தப் படம் மே மாதம் 13ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஜூன் 4ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெளியாகவுள்ளதால் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

முன்னதாக பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சலார்’ படமும் கூறிய தேதியைவிட கிட்டத்தட்ட 4 மாதங்கள் தாமதமாக ரிலீஸானது. அதனைத் தொடர்ந்து தற்போது ‘கல்கி 2989 ஏ.டி.’ படத்தின் ரிலீஸ் தேதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here