வெளியானது ‘களவானி பசங்க’ பாடல் கிளிம்ப்ஸ்..!

0
110

Kalvan: இயக்குநர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் படம் ‘கள்வன்’. இந்த படத்தின் கதையை ரமேஷ் அய்யப்பன் மற்றும் ஷங்கர் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.

மேலும், இந்த படத்தில் இவானா மற்றும் பாரதிராஜா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இந்த படத்தை டில்லி பாபு தயாரிக்கிறார். பி.வி ஷங்கர் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். ரேமண்ட் டெரிக் மற்றும் காஸ்டா ஆகியோர் படத்தொகுப்பு செய்கின்றனர்.

‘கள்வன்’ படம் வருகிற ஏப்ரல் 4ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது படத்தில் அடுத்த பாடலான ‘களவானி பசங்க’ பாடல் வரிகள் நாளை வெளியாகவுள்ளது.

அதற்கு முன்பாக இன்று ‘களவானி பசங்க’ பாடல் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது ‘X’ தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here