இணையத்தில் வைரலாகும் ‘கள்வன்’ மேக்கிங் வீடியோ.!

0
116

Kalvan: இயக்குநர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் படம் ‘கள்வன்’. இந்த படத்தின் கதையை ரமேஷ் அய்யப்பன் மற்றும் ஷங்கர் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.

மேலும், இந்த படத்தில் இவானா மற்றும் பாரதிராஜா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இந்த படத்தை டில்லி பாபு தயாரிக்கிறார். பி.வி ஷங்கர் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். ரேமண்ட் டெரிக் மற்றும் காஸ்டா ஆகியோர் படத்தொகுப்பு செய்கின்றனர்.

‘கள்வன்’ படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து, ‘கள்வன்’ படம் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி ரிலீஸானது. காட்டு யானையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது ‘கள்வன்’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. யூடியூப்பில் வெளியான இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here