சாலையில் திரியும் ‘கள்வன்’ யானை.. செல்ஃபி எடுத்த குழந்தைகள்..

0
102

‘Kalvan’: இயக்குநர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் படம் ‘கள்வன்’. இந்த படத்தின் கதையை ரமேஷ் அய்யப்பன் மற்றும் ஷங்கர் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.

மேலும், இந்த படத்தில் இவானா மற்றும் பாரதிராஜா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இந்த படத்தை டில்லி பாபு தயாரிக்கிறார். பி.வி ஷங்கர் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். ரேமண்ட் டெரிக் மற்றும் காஸ்டா ஆகியோர் படத்தொகுப்பு செய்கின்றனர்.

‘கள்வன்’ படம் வருகிற ஏப்ரல் 4ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது ‘கள்வன்’ படத்தில் வரும் யானை கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் விதமாக பொம்மை யானையை புரமோஷனுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

வாகனத்தில் சுற்றித்திரியும் பொம்மை யானை, மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் சென்றுள்ளது. அங்கிருந்த குழந்தைகள் பொம்மை யானையுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here