The Family Star: இயக்குநர் பரசுராம் பெட்லா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் திரைப்படம் ‘ஃபேமிலி ஸ்டார்’. இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் நடிக்கிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர்கள் தில்ராஜூ மற்றும் சிரிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இந்த படத்திற்கு கோபிசுந்தர் படத்திற்கு இசையத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
முன்னதாக ‘ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் முதல் பாடலான ‘நந்த நந்தனா’ பாடல் பிப்.7ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து செகண்ட் சிங்கிளான ‘கல்யாணி வச்சா வச்சா’ என்ற பாடல் வெளியாந்து.
இந்த நிலையில், தற்போது படத்தின் செகண்ட் சிங்கிள் தமிழில் ‘கல்யாண சத்தம் சத்தம்’ என வெளியாகியுள்ளது. திருமண நிகழ்வின்போது இந்த பாடல் வரும் வகையில் அமைந்துள்ளது.
யூடியூப்பில் வெளியான இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த ‘ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படம் ஏப்ரல் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.