‘கமலுடன் மோதும் அஜித்’.. ஒரே நேரத்தில் வெளியாகும் இரண்டு படங்கள்..!

0
86

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.

மேலும், இப்படத்தில் நடிகை ரெஜினாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாக ஆரவ் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘விடாமுயற்சி’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாக்கியுள்ளது. இந்தப் படம் வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் இந்தியன் 2 படமும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகவுள்ளது.

இதனால், நடிகர் அஜித்தின் விடாமுயற்சி மற்றும் கமலின் இந்தியன் 2 படமும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகவுள்ளதால் இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் நேருக்குநேர் மோதிக் கொள்ளும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கவுஹாத்தி காமாக்யா கோவிலில் தமன்னா தரிசனம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here