சந்தானம் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்..!

0
163

Santhanam’: இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் நடிகர் சந்தானம் புதிய படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை என்.அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் வழங்கும், சுஸ்மிதா அன்புசெழியன் தயாரிக்கிறார்.

முன்னதாக, ‘வெள்ளைக்கார துரை’, ‘தங்கமகன்’, ‘மருது’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களை தயாரித்த இந்நிறுவனம் தற்போது சந்தானத்தை வைத்து புதிய படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக பிரியாலயா நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் தம்பி ராமையா மற்றும் மறைந்த மனோபாலா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பில் சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் இன்று வெளியானது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை உலக நாயகன் கமல் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டார்.

தொடர்ந்து, அந்த பதிவில் கமல் கூறியதாவது, “எனது அன்புக்குரிய நண்பர், கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் வழங்கும், சுஸ்மிதா அன்புசெழியன் தயாரிக்கும், தம்பி சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் பெயரையும், போஸ்டரையும் வெளியிடுவதில் மகிழ்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here