பவதாரிணி மறைவு: இளையராஜாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கமல்..!

0
97

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி (47), சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஜன.25ஆம் தேதி மாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது திரையுலகினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இலங்கையில் தனியார் வைத்தியசாலையில் இருந்து கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பவதாரிணி உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடற்கூராய்வு செய்த நிலையில் அவரது உடல் இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது.

பின்னர் அங்கிருந்து தி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு பவதாரிணியின் உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு திரைப்பிரலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்கள் அஞ்சலியை தொடர்ந்து, பவதாரிணியின் உடல் அன்று இரவே ஆம்புலன்ஸ் மூலம் கிளம்பி தேனிக்கு மறுநாள் காலை 11 மணி அளவில் கொண்டு செல்லப்பட்டது.

அங்கு லோயர் கேம்ப் பகுதியில் உள்ள இளையராஜாவின் பண்னை வீட்டில் அவரது அம்மா சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவாவின் சமாதி அருகே பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன், இளையராஜாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தெலுங்கு நடிகர் மோகன்பாபு, அவரது மனைவியுடன் இளையராஜாவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here