‘தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க’.. கோவையில் பிரச்சாரத்தை நிறைவு செய்த ஆண்டவர்..

0
79

Kamal Haasan: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திமுக கூட்டணியில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையிலும் ஒரு மாநிலங்களவை எம்பி பதவி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கமல் தனது பிரச்சாரத்தை மார்ச் 29ஆம் தேதி முதல் தொடங்கினார்.

முதற்கட்ட பிரச்சாரத்தை ஈரோடு மாவட்டத்தில் தனது கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கமல் தனது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 17) கோயம்புத்தூரில் தனது பிரச்சாரத்தை முடித்துக்கொண்டார்.

இது குறித்து, கமல் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மேற்கொண்ட பரப்புரைப் பயணத்தை கோயம்புத்தூரில் நிறைவு செய்தேன்.

தேர்தல் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குச் சாவடிக்குச் சென்று திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து ஜனநாயகக் கடமையினை நிறைவேற்றுங்களென தமிழக வாக்காளர்கள் ஒவ்வொருவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here