கமலை மெண்டல் ஹாஸ்பிட்டலில் போய் சேத்துவிடுங்க.. சரமாரியாக சாடிய நபரால் சர்ச்சை..

0
82

Kamal Haasan: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திமுக கூட்டணியில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் டி.ஆர்.பாலுவை ஆதரித்து பேசியபோது, “பாஜக அரசு நாக்பூரை தலைநகரமாக மாற்ற பார்க்கிறார்கள்” என விமர்சனம் செய்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக பாஜக மாநில அண்ணாமலை தனது கருத்தை தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, “முதலில் கமல் ஹாசனுக்கு மூளைப் பரிசோதனை செய்துபார்க்க வேண்டும். அவர் சுயநினைவுடன் தான் இருக்கிறாரா? என மனநல மருத்துவரை அணுகி சோதனை செய்ய வேண்டும். நாக்பூரை தலைநகராக அறிவிப்பது எப்படி சாத்தியமாகும்?

நாக்பூரில் ஆர்எஸ்எஸ் அலுவலகம் இருப்பதால் கமல் இவ்வாறு கூறியிருக்கிறார். கமல் மட்டுமல்ல வேற யார் இதனை சொல்லி இருந்தாலும், அவர்களை மனநல மருத்துவரை அணுக கூறியிருப்பேன். ஒரே ஒரு சீட்டுக்காக தனது கட்சியையே அடமானம் வைத்துவிட்டார்.

அவர் எங்கள் கட்சியை பற்றி பேசுகிறாரா?.. திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. எது எப்படியோ தேர்தலில் நாங்கள் தான் ஜெயிப்போம்” என்றார். இதில், கமல் ஹாசன் குறித்து பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here