‘இளையராஜாவை தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை’ – பவதாரிணி இறப்புக்கு இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன்..!

0
189

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி (47), சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (ஜன.25) மாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இலங்கையில் தனியார் வைத்தியசாலையில் இருந்து கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பவதாரிணி உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடற்கூராய்வு செய்த பின்னர் அவரது உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

பவதாரிணியின் இறப்புக்கு திரைப்பிரலங்கள், அரசியல் பிரபலங்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவை தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன்.

பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல்” என பதிவிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: இளையராஜா மகள் பவதாரிணி இலங்கையில் உயிரிழப்பு.. அவரது உடல் இன்று மாலை சென்னை வருகை..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here