KamalHaasan: கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வேட்டையாடு விளையாடு’. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் டேனியல் பாலாஜி (48).
இவர் நேற்றிரவு ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாகவே உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடலுக்கு சினிமா பிரபலங்கள், உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது ‘X’ தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது.
இளம் வயது மரணங்களின் வேதனை பெரியது. பாலாஜியின் குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கண் தானம் செய்ததன் காரணமாக அவர் மறைந்த பின்னும் உயிர் வாழ்வார். ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு எனது அஞ்சலி” என குறிப்பிட்டுள்ளார்.