‘சத்யாவாக மாறும் அசோக் செல்வன்’ – திடீர் அப்டேட் கொடுத்த படக்குழு..!

0
86

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1988ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சத்யா’. இந்த படத்தை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இந்த படம் கமலின் கெரியரில் மிகமுக்கியமான படமாகும். மேலும், இந்த படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். மேலும், இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘வலையோசை’ என்ற பாடல் பட்டிதொட்டி எல்லாம் ஹிட்டானது. கமல்ஹாசனின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமான சத்யா தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ரீமேக் படத்தை ‘போர் தொழில்’ படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்குவதாகவும் இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here