‘திருச்சி மலைக்கோட்டை இப்பொழுது திமுகவின் கோட்டை’ – கமல்ஹாசன் பேச்சு..

0
110

KamalHaasan: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திமுக கூட்டணியில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கிவிட்டார்.

முதற்கட்டமாக மார்ச்.29ஆம் தேதி ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷுக்கு ஆதரவாக கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு தொகுதிகளில் வாக்கு சேர்கரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் இன்று திருச்சியில் கமல்ஹாசன் தனது பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். இந்நிலையில் திருச்சி வந்த கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “டெல்லி செங்கோட்டையை விட மூத்த கோட்டையான திருச்சி மலைக்கோட்டை இப்பொழுது திமுகவின் கோட்டையாக உள்ளது” என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here