இளையராஜா பையோபிக்: ‘நான் தான் திரைக்கதை எழுதுகிறேன்’ – கமல்ஹாசன்!

0
113

இளையராஜாவின் பயோபிக்கில் இளையராஜாவாக நடிக்கிறார் தனுஷ் என்பதும் இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார் என்பதையும் நேற்று (மார்ச்.20) அதிகாரப் பூர்வமாக படக்குழு அறிவித்திருக்கிறது.

படத்திற்கு ‘இளையராஜா’ என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியிடப்பட உள்ளது.

படத்தின் தொடக்க வி்ழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன், வெற்றிமாறன், இளையராஜா என திரையுலகத்தை சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவா இல்லை வேறு ஒருவரா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்த நிலையில், படத்தின் திரைக்கதையை கமல்ஹாசன் எழுதுகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் சீங்கீதம் சீனிவாசராவின் படைப்புகளையும், பங்களிப்பையும் கொண்டாடும் வகையில், சென்னையில் ‘அபூர்வ சிங்கீதம்’ என்கிற பெயரிலான விழாவை சென்னையில் கமல்ஹாசன் ஒருங்கிணைத்திருக்கிறார்.

அந்த விழாவின் நான்காம் நாள் நேற்று நடைபெற்றது. அதையொட்டி ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ திரைப்படம் திரையிடப்பட்டது. நிகழ்வில் இசையமைப்பாளர் இளையராஜாவும் கலந்துகொண்டிருந்தார்.

அப்போது பேசிய கமல்ஹாசன், “இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு நான் திரைக்கதை எழுதுகிறேன் என்று குறிப்பிட்டார். படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிற நிலையில் இந்த தகவல் மேலும் படத்திற்கான ஹைப்பை அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here