Kangana Ranaut: முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்சென்டிற்கும் வருகிற ஜூலை 12ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.
அதற்கான ப்ரீ வெட்டிங் குஜராத்தின் ஜாம்நகரின் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை நடைபெற்றுது. இந்த நிகழ்வில் உலக அளவில் இருக்கும் ஏராளமான தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த மூன்று நாட்களும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஷாருக்கான், சல்மான்கான், ரன்வீர் கபூர் ரஜினிகாந்த், அட்லீ, ராம் சரண் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் மேடையில் நடனமாடினர். அதில், பிரபல பாடகி ரிஹானா அம்பானி வீட்டு திருமண விழாவில் நடனமாடினார். இதற்கு பல கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் தற்போது நடிகை கங்கனா ரனாவத், அம்பானி மகன் திருமண கொண்டாட்டம் குறித்து போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் பண நெருக்கடியால் சிக்கி தவிக்கிறேன்.
ஆனால் அதற்காக எத்தனை ஆசைகாட்டி தூண்டிவிட்டாலும் ஒரு போதும் நான் திருமண நிகழ்ச்சிகளில் நடனமாடியது கிடையாது. எத்தனையோ ஐட்டம் பாடல்களுக்கு நடனமாட வாய்ப்புகள் கிடைத்தது.
ஆனால், அவற்றை எல்லாம் நான் தவிர்த்துவிட்டேன். புகழ் மற்றும் பணம் தேவையில்லை என சொல்லுபவர்களுக்கு வலிமையான பண்பும் கண்ணியமும் இருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.